Connect with us

ரசிகர்கள் வெள்ளத்தில் பிரமாண்டமாக ஊர்வலம் வரும் இந்திய வீரர்கள் – வைரல் வீடியோ..!!

Featured

ரசிகர்கள் வெள்ளத்தில் பிரமாண்டமாக ஊர்வலம் வரும் இந்திய வீரர்கள் – வைரல் வீடியோ..!!

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி இன்று தாயகம் திரும்பியுள்ள நிலையில் மும்பையில் ரசிகர்கள் வெள்ளத்தில் இந்திய வீரர்கள் பிரமாண்டமாக ஊர்வலம் வரும் காட்சிகள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

கிரிக்கெட் வெறியர்களின் முரட்டுத்தனமான ஆதரவுக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதி வரை போராடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது .

திட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் இன்று தனி விமானம் மூலம் இந்திய அணி தாயகம் திரும்பிய நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது .

முதல் கட்டமாக டெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்த இந்திய வீரர்கள் அவரிடம் வாழ்த்து பெற்று நேராக மும்பைக்கு சென்றது அங்கு குவிந்திருந்த ரசிகர்கள் வெள்ளத்தில் கோப்பையுடன் இந்திய வீரர்கள் பிரமாண்டமாக ஊர்வலம் வரும் காட்சிகள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top