Connect with us

“எனக்கு நடந்த துரோகம்… ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதி புது பதில்! 😱🔥”

madhampatti

Cinema News

“எனக்கு நடந்த துரோகம்… ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதி புது பதில்! 😱🔥”

தமிழ்நாட்டில் பிரபலமான சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் முதலில் ஸ்ருதியை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். பின்னர் ரகசியமாக ஜாய் கிரிஸில்டா என்ற பெண்மணியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது வெளிச்சத்துக்கு வந்ததும் விஷயம் பெரிய பஞ்சாயத்தாக மாறியது.

ஒருசமயம் கிரிஸில்டா அவரிடமிருந்து விலக முயற்சிக்க, தங்களின் திருமண புகைப்படங்களையே வெளியிட்டு, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றார். அந்தக் குழந்தை தன்னுடையதா எனத் தெரிந்துகொள்ள டி.என்.ஏ சோதனைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று ரங்கராஜ் கூறியிருந்தாலும், இதுவரை அவர் சோதனைக்காக ஹாஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதே அனைவரும் எதிர்பார்த்த கேள்வியாக இருந்தது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அவர், மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்தபோது கணவரோடு சேர்ந்து வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

madhampatti
madhampatti

மேலும் ஜாய் கிரிஸில்டா “எங்களை பிரித்து பணம் பறிப்பதற்காகவே இது எல்லாம்” என்ற கடும் குற்றச்சாட்டும் வைத்தார். “என் கணவருக்கு நான் கடைசிவரை துணை நிற்பேன்” என்ற அவரது நிலைப்பாடு பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் இப்போது ஸ்ருதியின் மனநிலை மாறியதற்கான சான்று போலவே அவரது சமீபத்திய இன்ஸ்டா பதிவொன்று வைரலாகி வருகிறது. தனது படத்துடன், “உடைந்த தருணங்கள், தாக்குதல்கள், துரோகங்கள், விமர்சனங்கள்… எல்லாவற்றையும் எதிர்கொண்டபோதும் பாவத்தில் விழாமல் வலுவாக இருந்த என் இதயத்துக்கு நன்றி” என்று அவர் எழுதியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள்,

“கடைசிவரை கணவருக்கு துணை நிற்பேன் என்ற ஸ்ருதி… இப்போது துரோகம் நடந்துவிட்டதாக எழுதுகிறார். இது மறைமுகமாக ரங்கராஜ் தான் துரோகம் செய்தார் என்று ஒத்துக்கொள்வதா? திடீர் மனமாற்றத்துக்கு காரணம் என்ன?” என்று கேள்விகள் எழுப்பி விவாதித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “சீரியல் நடிச்சா சினிமாவா கிடையாதா? தயாரிப்பாளர்களிடம் ஹேமா வைத்த கோரிக்கை!”

More in Cinema News

To Top