Connect with us

“பொங்கல் ரிலீஸ் பறிபோகிறதா? ‘வா வாத்தியார்’ குழப்பம் அதிகரிப்பு!”

Cinema News

“பொங்கல் ரிலீஸ் பறிபோகிறதா? ‘வா வாத்தியார்’ குழப்பம் அதிகரிப்பு!”

கார்த்தி – நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகி வரும் வா வாத்தியார் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உருவாகியுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில், கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி, இசையில் சந்தோஷ் நாராயணன்… என ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உயர்ந்த நிலையில் இருந்தது.

இப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வரலாம் என்று சொல்லப்பட்டாலும், டிசம்பர் வரை கூட தமிழ் வெர்ஷன் ரிலீஸ் தேதியை அறிவிக்காதது ரசிகர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

இன்று வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்டில், படக்குழு வா வாத்தியார் தெலுங்கு டைட்டில் பற்றிய அறிவிப்பை மட்டும் பகிர்ந்துள்ளது. ஆனால் தமிழ் ரிலீஸ் பற்றிய எந்த தகவலும் இல்லை!

இதனால், படம் தாமதமா? பொங்கல் ரிலீஸ் படம் குறையுமா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top