Connect with us

‘காந்தா’ பட நடிகர்களின் சம்பளம்: துல்கர் முதல் சமுத்திரக்கனி வரை எவ்வளவு?

Cinema News

‘காந்தா’ பட நடிகர்களின் சம்பளம்: துல்கர் முதல் சமுத்திரக்கனி வரை எவ்வளவு?

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த காந்தா கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றியிருந்தனர். பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நடிகர்களின் நடிப்பு பாராட்டுக்குரியதாக இருந்தாலும், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் எதிர்பார்த்த உயரத்தை எட்டவில்லை.

காந்தா பட நடிகர்களின் சம்பளம்

இந்நிலையில், காந்தா படத்தில் நடித்த பிரதான நடிகர்கள் பெற்றதாகக் கூறப்படும் சம்பள விவரங்கள் பின்வருமாறு: துல்கர் சல்மான் – ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி, ராணா டகுபதி – ரூ. 6 கோடி முதல் ரூ. 8 கோடி, பாக்யஸ்ரீ போர்ஸ் – ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி, சமுத்திரக்கனி – ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி.

மேலும், படத்தின் தயாரிப்பாளர்களாக இருக்கும் துல்கரும் ராணாவும் சம்பளத்துக்கு மேலாக லாபத்திலும் ஒரு பங்கை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோவா திரைப்பட விழாவில் ஐந்து தமிழ் படங்கள்: செல்போன் அடிமைத்தனம் முதல் பெண் கல்வி வரை பேசும் கதைகள்

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top