Connect with us

தாயாகிய ரஜினி பட நடிகை ராதிகா ஆப்தே: குவியும் வாழ்த்துக்கள்..

Featured

தாயாகிய ரஜினி பட நடிகை ராதிகா ஆப்தே: குவியும் வாழ்த்துக்கள்..

ராதிகா ஆப்தே, இந்திய திரைப்படங்களில் பிரபலமான நடிகையானவர். தமிழ், இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தனது திறமையால் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.

வா லைப் ஹோ தோ ஐஸி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ராதிகா, தமிழ் சினிமாவில் ‘தோனி’ படத்தின் மூலம் பரவலான பிரபலத்தைக் கொண்டார். அதன் பிறகு, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச் செல்வன்’ போன்ற படங்களில் நடித்து முக்கியமான பாத்திரங்களில் நடித்தார். ஆனால், ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் பரபரப்பான புகழைக் கொடுத்தது.

இந்திய சினிமாவில் தனக்கான இடத்தை உருவாக்கிய ராதிகா, ஹாலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் மற்றும் மூன்று ஆங்கில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு, நடிகை ராதிகா ஆப்தே, பெனெடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்தார். சமீபத்தில், இவர் கர்ப்பமாக இருப்பது சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படங்களால் தெரியவந்தது. தற்போது, ராதிகா ஆப்தேக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் சமீபத்தில் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.அவரின் மகிழ்ச்சியான வாழ்த்துகள் உடன் இந்த நியூஸ் பரவலாக கொண்டாடப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “அரசியல்வயப்படுங்க பசங்களா?” – தேவர் விழாவில் விஜய்யை விமர்சித்த மோகன் ஜி!

More in Featured

To Top