Connect with us

தனி ஒருவன் 2 எப்போ? இயக்குநர் மோகன் ராஜா மற்றும் அர்ச்சனா கொடுத்த நேரடி அப்டேட்!

Featured

தனி ஒருவன் 2 எப்போ? இயக்குநர் மோகன் ராஜா மற்றும் அர்ச்சனா கொடுத்த நேரடி அப்டேட்!

தமிழ் சினிமாவின் கிளாசிக் திரில்லராக வாழும் படம் தனி ஒருவன். 2015-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியிருந்தார். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடித்த இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றிக்கு பிறகு, தனி ஒருவன் 2 குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. 2023-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாலும், இதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற விழாவில், இயக்குநர் மோகன் ராஜாவும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் கலந்து கொண்டனர். அப்போது தனி ஒருவன் 2 குறித்த கேள்விக்கு அவர்கள் பதிலளித்தனர்.

மோகன் ராஜா கூறினார்:
“தனி ஒருவன் 2 நமக்கு ஸ்பெஷல் படம். எல்லாமே ரெடியா இருக்கு. தயாரிப்பு நிறுவனம் சரியான நேரம் சொல்றோம் தான் என்கிறாங்க.”

அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது:
“நான் பெற்ற முதல் விருது தான் தனி ஒருவன் படத்திற்கானது. இரண்டாம் பாகம் மிகப்பெரிய படம். அதனால சரியான நேரம் பார்த்து துவங்கவிருக்கிறோம். ரவி, நயன் இருவரும் படத்தில் இருக்காங்க. ஸ்கிரிப்ட் பயங்கரமாக இருக்கு.” அப்படியானால், தனி ஒருவன் 2 விரைவில் ஆரம்பமாகும் என உறுதி. ரசிகர்களுக்காக ஒரு மாஸ் ரீஎண்ட்ரி காத்திருக்கிறது!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top