Connect with us

“சீயான் விக்ரமின் தங்கலான் பட Update சொன்ன Hollywood நடிகர்! வைரலாகும் Pics!”

Cinema News

“சீயான் விக்ரமின் தங்கலான் பட Update சொன்ன Hollywood நடிகர்! வைரலாகும் Pics!”

ஹாலிவுட் நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் ’தங்கலான்’ படத்தின் அப்டேட்டை பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சியான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’தங்கலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய கேரக்டரில் நடித்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் என்பவர் தனது பகுதியின் டப்பிங் பணியை முடித்துள்ளார்.

இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’தங்கலான்’ அற்புதமாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் ’தங்கலான்’ படத்தில் நடித்திருக்கிறார்கள்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில், ஜிவி. பிரகாஷ் குமார் இசையில், ஆர்.கே. செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியாடிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - எப்போது தெரியுமா..?

More in Cinema News

To Top