Connect with us

பிபா உலக கோப்பை 2026 தகுதி சுற்று போட்டிகள் – இந்திய கால்பந்து அணி அபார வெற்றி

Featured

பிபா உலக கோப்பை 2026 தகுதி சுற்று போட்டிகள் – இந்திய கால்பந்து அணி அபார வெற்றி

குவைத் நாட்டில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிபா உலக கோப்பை 2026 தகுதி சுற்று போட்டியில் குவைத் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

குவைத்தில் நாட்டில் உள்ள பிரபல கால்பந்து மைதானத்தில் பிபா உலக கோப்பை 2026 தகுதி சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது.

இதில் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்டியது.

அனல் பறக்க நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான மன்வீர் சிங் 75-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார் . இதையடுத்து பல முறை முயற்சி செய்தும் இரு அணிகளால் கோல் அடிக்கமுடியவில்லை .

ஆட்டத்தின் இறுதிவரை கோல் போட முடியாததால் 1 கோல் அடித்து முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து 21-ஆம் தேதி நடைபெறும் மற்றொரு தகுதி சுற்று போட்டியில் கத்தார் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது .

இறுதியில் இந்த தகுதி சுற்று போட்டியில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் பிபா உலக கோப்பை 2026 ஏ.எப்.சி. 3-வது சுற்றுக்கு செல்வதுடன்,2027 ஏ.எப்.சி. ஆசிய கோப்பைக்கான போட்டிக்கு நேரடி தகுதி பெறும்.

சமீப காலமாக கால்பந்து விளையாடி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி வரும் நிலையில் இந்த தகுதி சுற்று போட்டியிலும் வெற்றி பெற்று அடுத்தடுத்த ஆட்டங்களுக்கு முன்னேற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை சாந்தினி ஷார்ட் உடையில் Glamour போட்டோஷூட்..

More in Featured

To Top