Connect with us

“தளபதியின் ‘GOAT’ பட பொங்கல் Special Poster! Viral!”

Cinema News

“தளபதியின் ‘GOAT’ பட பொங்கல் Special Poster! Viral!”

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த போஸ்டரில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் உள்ள நிலையில் நால்வர் கைகளிலும் துப்பாக்கி மற்றும் புன்சிரிப்பு இருப்பதை பார்க்கும் போது வேற லெவலில் இந்த போஸ்டர் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top