Connect with us

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்..

Featured

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்..

தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம் ஜனநாயகன், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிறது. இது விஜயின் கடைசி திரைப்படமாகும்.
அவர் அரசியலில் களமிறங்க இருப்பதால், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் நேற்று கொடைக்கானலுக்கு சென்றார். அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இப்படத்தில் முக்கிய மாற்றம் ஒன்று! உலகப் புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞர் ஹனுமான்கைண்ட் இப்படத்தில் இணைந்துள்ளார். அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ஒரு செம ராப் பாடலை ஹனுமான்கைண்ட் பாடியுள்ளார்.

அவர் கூறும்போது, “தளபதி விஜய்க்காக ஜனநாயகன் படத்தில் செம ராப் பாடல் ஒன்றை அனிருத் இசையில் பாடியிருக்கிறேன். இன்னும் நிறைய புராஜெக்ட்டுகளுக்காக சென்னை வருவேன். பல அதிரடிகள் காத்திருக்கின்றன!” என தெரிவித்துள்ளார். ஹனுமான்கைண்ட் ஒரு இந்திய ராப் கலைஞர்.
‘Big Dogs’ என்ற பாடலால் உலக அளவில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: தக் லைஃப் பற்றி கமல் ஹாசன் முக்கிய அறிவிப்பு!

More in Featured

To Top