Connect with us

‘Thalapathy 69’ படத்தில் இந்த இரண்டு பிரபலங்களும் உண்டா?! Latest வைரல் தகவல்!

Cinema News

‘Thalapathy 69’ படத்தில் இந்த இரண்டு பிரபலங்களும் உண்டா?! Latest வைரல் தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 68 வது திரைப்படமான ’GOAT’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 69வது திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் மூன்று பிரபலங்கள் தளபதி விஜய்யுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் எப்போதும் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த திரைப்படத்தின் சில முக்கிய முடிவுகளை எடுத்து விடுவார்.

அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியவர்களை தளபதி விஜய் முன்கூட்டியே முடிவு செய்து அந்த படத்திற்கான பணியையும் தொடங்க அனுமதிப்பார். இந்தநிலையில் தற்போது ’GOAT’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிவடைந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது கார்த்திக் சுப்புராஜ் என்றும் இந்த படத்தில் சந்தோஷ நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் SJ சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே ’தளபதி 69’ திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் மற்றும் SJ சூர்யா ஆகிய மூன்று பிரபலங்கள் இணையே இருப்பதாக கூறப்படும் வேற லெவல் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் - நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top