Connect with us

“தளபதி படத்தின் 68 அடுத்தகட்ட Shooting எங்கு தெரியுமா?! வெளியான Latest தகவல்!”

Cinema News

“தளபதி படத்தின் 68 அடுத்தகட்ட Shooting எங்கு தெரியுமா?! வெளியான Latest தகவல்!”

கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. அதேபோல், சென்னையில் நடந்த பூஜை நிகழ்ச்சியில் தளபதி 68 படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

சென்னையை தொடர்ந்து தாய்லாந்தில் நடைபெற்ற தளபதி 68 படப்பிடிப்பில், விஜய் நடித்த ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாம். பின்னர் மீண்டும் சென்னையில் தொடர்ந்த தளபதி 68 படப்பிடிப்பு, தற்போது துருக்கிக்கு சென்றுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெறவுள்ள தளபதி 68 படப்பிடிப்புக்காக விஜய், இவானா உட்பட மேலும் சிலரும் சென்றுள்ளனர்.

துருக்கியில் மொத்தம் 25 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலான காட்சிகள் விஜய் தொடர்பானது எனவும் சொல்லப்படுகிறது. அதன்படி டிசம்பர் முழுவதும் துருக்கியில் தான் தளபதி 68 படப்பிடிப்பு நடைபெறுகிறதாம். அதன் தொடர்ச்சியாக தளபதி 68 ஷூட்டிங் சென்னையில் தொடரும் என சொல்லப்பட்டது. ஆனால், சென்னைக்குப் பதிலாக ஹைதராபாத்தில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

துருக்கி ஷெட்யூலுக்குப் பிறகு ஸ்டுடியோவில் மட்டுமே தளபதி 68 படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. இதனால் விஜய் துருக்கியில் இருந்து நேரடியாக ஹைதராபாத் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 68 அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தளபதி 68 டைட்டில், விஜய் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் 'ஸ்டார்' படத்தை தாறுமாறாக புகழ்ந்த இயக்குநர் நெல்சன்..!!

More in Cinema News

To Top