Connect with us

அஜித் குமார் வாங்கிய Mercedes-AMG GT3 ரேஸிங் கார் – விலை கேட்டு ரசிகர்கள் ஷாக்!

Featured

அஜித் குமார் வாங்கிய Mercedes-AMG GT3 ரேஸிங் கார் – விலை கேட்டு ரசிகர்கள் ஷாக்!

சினிமாவில் டாப் நடிகர்களாக வெற்றி பெற்ற பிறகு, தொடர்ந்து புதிய படங்களில் நடித்து, அதில் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான பிரபலங்களில் காணப்படுகிறது. ஆனால், நடிகர் அஜித் குமார் மட்டும் தனது தனி வழியில் பயணித்து, “என் வழி தனி வழி” என மாஸ் காட்டி வருகிறார்.

‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எப்படியோ ரிலீஸானது. இருப்பினும், அந்த படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து, இரண்டு மாதங்களுக்குள் அவரது அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ வெளியாகி, செம மாஸ் வசூல் வேட்டை நடத்தியது. இப்போது, இரண்டு படங்கள் ரிலீஸான பிறகு, அடுத்த படத்தை குறித்து கொஞ்சம் யோசிப்போம் என முடிவு செய்த அஜித், சினிமாவிற்கு சிறிது இடைவெளி கொடுத்து, தனது விருப்பமான கார் ரேஸில் முழு மனதுடன் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து பல ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை தன்வசமாக்கி வருகிறார். அண்மையில், Mercedes-AMG GT3 என்ற ரேஸிங் காரை அஜித் வாங்கியிருந்தார். அந்த காருடன் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இந்த ரேஸ் காரின் விலை குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Mercedes-AMG GT3 ரேஸ் காரின் விலை சுமார் ரூ.10 கோடியுக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிப்பிலும், அவரது பாராட்டத்திற்குரிய பிற சித்திகளில் அஜித் தொடர்ந்து தன்னையே தாண்டி வெற்றி பெறுகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss 9: "நீங்க செய்தது தப்புதான்" – கம்ருதீனை எதிர்த்து ஒருங்கிணையும் ஹவுஸ்மேட்ஸ்!

More in Featured

To Top