Connect with us

தக் லைஃப் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

Featured

தக் லைஃப் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

வருகிற ஜூன் 5ம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தக் லைஃப் வெளியாக உள்ளது. இயக்குனர் மணி ரத்னமும் நாயகன் கமல் ஹாசனும் நாயகன் படத்திற்கு பிறகு, 38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், கமலுடன் இணைந்து சிம்பு இப்படத்தில் முதன்முறையாக நடித்துள்ளார். இதோடு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

தக் லைஃப் படத்தின் ப்ரீ புக்கிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. உலகளவில் ப்ரீ புக்கிங்கில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்போழுதே ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூபாய் 17 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது, படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த வரவேற்பாக மதிக்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  👉 “Futuristic Love Story-ஆ? LIK படம் ரசிகர்களை கவருதா?”

More in Featured

To Top