Connect with us

82வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானி இளையராஜா! அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Featured

82வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானி இளையராஜா! அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவிற்கு மாபெரும் பெருமை சேர்த்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இவர், இன்று வரை சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இசைத்துறையில் வெற்றிகரமாக பயணித்துவரும் இளையராஜா, பல சாதனைகளை படைத்துள்ளார்.

சமீபத்தில் லண்டனில் தனது வாலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றி மேலும் ஒரு சாதனை புரிந்தார். தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்த நாள் எனக் கூறப்படுகிறது. 82வது பிறந்த நாளை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

ஆனால் உண்மையில், இளையராஜாவின் பிறந்த நாள் நாளை ஜூன் 3ம் தேதி தான். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அவரை கௌரவிக்கும் வகையில், இளையராஜா தனது பிறந்த நாளை இன்று ஜூன் 2ம் தேதி கொண்டாடுகிறார். இளையராஜாவுக்கு “இசைஞானி” என்ற பட்டத்தை வழங்கியவர் கருணாநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இளையராஜாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 150 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் அல்ல என்பது முக்கியமானது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top