Connect with us

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்த 3 நாட்களில் டாஸ்மாக் மூடப்படும் – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு..!!

Featured

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்த 3 நாட்களில் டாஸ்மாக் மூடப்படும் – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு..!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்த 3 நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தங்களது தேர்தல் பரப்புரைகளை தீவிரபடுத்தி உள்ளனர்.

இதில் பாஜக உளப்பட பல கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நாடே விழா கோலம் போன்றுள்ளது . இதில் கட்சியில் இருக்கும் திரை பிரபலங்கள் ,பிரபல அரசியல் தலைவர்கள் என அனைவரும் மக்களிடம் நேரடியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி Fans Festival Mode ON! ‘அண்ணாமலை’ மீண்டும் பாக்க Ready-aa?

More in Featured

To Top