Connect with us

நாளைக்கு சிறப்பான சம்பவம் இருக்கு மக்களே – தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இருந்து வெளியான டக்கர் அப்டேட்..!!

Cinema News

நாளைக்கு சிறப்பான சம்பவம் இருக்கு மக்களே – தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இருந்து வெளியான டக்கர் அப்டேட்..!!

நடிகர் தனுஷின் சிறப்பான தரமான நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படத்தில் இருந்து தாறுமாறான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

குளோபல் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் தனுஷின் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது வேற லெவலில் உருவாகி உள்ள திரைப்படம் படம் தான் கேப்டன் மில்லர்.

பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . மேலும் இப்படத்திற்கு GV பிரகாஷ் இசையமைத்துள்ளார் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இம்மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி இத்திரைப்படம் ஜனவரி மாதம் 12-ம் தேதி வௌியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .

அதன்படி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக அழகிய ப்ரோமோ வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை அசால்டாக வீழ்த்தியது சென்னை அணி..!!

More in Cinema News

To Top