Connect with us

டி20 உலக கோப்பை : இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு..!!

Featured

டி20 உலக கோப்பை : இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது.

நியூயார்க் மைதானத்தில்நடைபெறும் இந்த அனல் பறக்கும் போட்டியில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது .

இந்நிலையில் மழை நின்று வானிலை சீரானதால் இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டது . அதன்படி இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

வெறித்தனமாக நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு - ஒன்றாக அறிவித்த நட்சத்திர ஜோடி..!!

More in Featured

To Top