Connect with us

அரசியலில் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

Featured

அரசியலில் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

அரசியலில் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :

பிரதமர் தமிழ்நாட்டுக்கு எட்டு முறை வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே பி நட்டா ரோடு ஷோ நடத்தினார்கள் . இருப்பினும் பாஜக வெற்றி பெறவில்லை.

அதிமுகவை பொறுத்தவரை நான் மட்டுமே அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன். 2019 மக்களவைத் தேர்தலை விட ஒரு சதவீத அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதால் அதிமுகவுக்கு இது வெற்றியே.

சசிகலா , ஓபிஎஸ் பிரிந்து சென்றதால் தான் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது. எஸ்.பி வேலுமணிக்கும் , எனக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அண்ணாமலை குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை .

அரசியலில் பாஜகவில் இருக்கும் அண்ணாமலையை அடையாளம் காட்டியது அதிமுக தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொடர் மரணங்கள், படகு விபத்து – காந்தாரா 2 ஷூட்டிங்கில் பரபரப்பு..

More in Featured

To Top