Connect with us

பாராட்டை கொட்டித் தீர்த்தார்கள்.. சிம்பொனி வெற்றிக்கு பின் இளையராஜாவின் பேட்டி..

Featured

பாராட்டை கொட்டித் தீர்த்தார்கள்.. சிம்பொனி வெற்றிக்கு பின் இளையராஜாவின் பேட்டி..

இசைஞானி இளையராஜா லண்டனில் தனது வாலியன்ட் சிம்பெனியை அரங்கேற்றிய பின், சென்னை விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு பெற்றார். செய்தியாளர்களுடன் பேட்டியளித்த அவர், “எல்லோருக்கும் நன்றி. நான் மலர்ந்த முகத்துடன் கைவிட்டு சென்றதால் நிகழ்ச்சி வெற்றியடைந்தது. இசை எழுதுவது முக்கியம், ஆனால் அதை சரியாக வாசிப்பதும் அவசியம்” என்றார்.

“மியூசிக் கண்டக்டரின் பங்கு முக்கியம். ஒவ்வொரு ஸ்வரத்தையும் பார்வையாளர்கள் ஆழமாக கவனித்தனர். சிம்பொனியின் 4 மூவ்மெண்ட் முடிவுக்கு முன்னர் கை தட்டுவது விதிமுறை. ஆனால், நமது ரசிகர்கள் முதலில் மூவ்மெண்ட் முடிந்ததும் கைதட்டி, அவர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்” என்றார்.

“தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது. முதல்வர் எனக்கு அரசு மரியாதையுடன் வரவேற்றார். தமிழர்கள் என்னை வாழ்த்தி வரவேற்கிறார்கள். இது எனக்கு பெருமை” என்றார்.

“இந்த இசை 13 நாட்டில் நடைபெற உள்ளது. அங்கு எல்லா நாடுகளும் அதை ரசிக்கும். என் வயது 82. நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீங்கள் நினைக்காதீர்கள். என்னுடைய கால்களில் தான் இந்த இடத்துக்கு வந்தேன்” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரவிமோகன்–ஆர்த்தி சர்ச்சை: ஒரு வரியால் சமூக வலைதளமே வெடித்தது!

More in Featured

To Top