Connect with us

அலப்பறை கிளப்புறோம் : மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார் சூர்யகுமார்

Featured

அலப்பறை கிளப்புறோம் : மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார் சூர்யகுமார்

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் தற்போது உடல்நலம் தேறி அணிக்கு திரும்பியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் நடப்பாண்டில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டியில் மூன்றிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது.

இதன்காரணமாக மும்பை அணியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ள உள்ள தற்போது அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக சிறப்பான தரமான தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ள டெல்லிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருப்பேன் – கண்ணீர் மல்க உறுதி அளித்த விஜய்

More in Featured

To Top