Connect with us

சூர்யாவின் ‘கருப்பு’ ஆடியோ லாஞ்ச் மதுரையில் பிரம்மாண்டம் – ரசிகர்கள் உற்சாக வெள்ளம்!

Cinema News

சூர்யாவின் ‘கருப்பு’ ஆடியோ லாஞ்ச் மதுரையில் பிரம்மாண்டம் – ரசிகர்கள் உற்சாக வெள்ளம்!

நடிகர் சூர்யா நடித்துவரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா ஏப்ரல் 26ஆம் தேதி மதுரையில் மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவை பிரம்மாண்ட ரசிகர் கொண்டாட்டமாக மாற்ற தயாரிப்புக் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சூர்யாவின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர், பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. மதுரையில் நடைபெறும் இந்த விழா தென்னக ரசிகர்களுக்கான ஒரு சிறப்பு கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் குறித்த எதிர்பார்ப்பும் இதன் மூலம் மேலும் அதிகரித்துள்ளது. ‘கருப்பு’ திரைப்படம் சூர்யாவின் அடுத்த பெரிய வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top