Connect with us

‘சூர்யா 43’ படப்பிடிப்புக்கு கால் சீட் கொடுத்த நடிகர் சூர்யா – எப்போ ஷூட்டிங் தெரியுமா..?

Cinema News

‘சூர்யா 43’ படப்பிடிப்புக்கு கால் சீட் கொடுத்த நடிகர் சூர்யா – எப்போ ஷூட்டிங் தெரியுமா..?

சுதா கொங்கரா – சூர்யா காம்போவில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நடிகர் விரைவில் தனது அடுத்தகட்ட அப்டேட்டுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்தவகையில் நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 43 ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி அனைவரையும் குஷி படுத்தியது .

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் , துல்கர் சல்மான், நஸ்ரியா, பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மா உட்பட பலர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர் .

இதுமட்டுமின்றி இப்படத்திற்கு நம்ப ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இசைமைக்க உள்ளார் . இது அவரின் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வைத்த நிலையில் இப்படத்தின் சிறிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது .

அந்த அப்டேட் என்னவென்றால் சூர்யா 43 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 2-வது வாரம் மதுரையில் தொடங்க உள்ளதாகவும் மேலும் பல இடங்களில் லொகேஷன்களை தேர்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஜஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிரட்டுமா ஹைதராபாத் - டாஸ் வென்ற SRH பேட்டிங் தேர்வு..!!

More in Cinema News

To Top