Connect with us

நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து முதன்முறையாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Vijay_Rajinikanth

Cinema News

நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து முதன்முறையாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்து முதல் முறையாக பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த், விஜய்க்கு வாழ்த்து தெரித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சியின் சின்னம், கொடி, கொள்கைகள் போன்றவற்றை அறிவித்து மக்களை சந்திக்க உள்ளதாகவும், 2026 பாராளுமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் என்பது ஒரு தொழில் அல்ல என்பதால், முழுநேர மக்கள் பணி செய்வதற்காக தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து அவர் அரசியலில் களமிறங்குவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் அவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தாலும், நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து பொதுவெளியில் எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் தயாராகி வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க ஆந்திரா செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்தார். விஜயின் அரசியல் அறிவிப்பு குறித்து ரஜினிகாந்த் பொதுவெளியில் பேசுவது இதுதான் முதல்முறையாகும். இதன் மூலம் காக்கா கதையால் கடந்த சில காலமாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்ட நிலையில், அதற்கு இந்த வாழ்த்து முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top