Connect with us

“Sundar C Thalaivar173 OUT! அடுத்த நிமிஷமே கமல்–குஷ்பூ நேரில் சந்திப்பு… என்ன காரணம்?”

Cinema News

“Sundar C Thalaivar173 OUT! அடுத்த நிமிஷமே கமல்–குஷ்பூ நேரில் சந்திப்பு… என்ன காரணம்?”

ரஜினி – கமல் கூட்டணியில் உருவாகவிருந்த ‘தலைவர் 173’ படத்திலிருந்து சுந்தர்.சி திடீரென விலகிய செய்தி திரையுலகை அதிரவைத்திருந்தது. ரஜினியை ஹீரோவாக வைத்து, கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை சுந்தர் இயக்குவார் என்ற அறிவிப்பு வெளிவந்த சில நாட்களிலேயே, “தவிர்க்க முடியாத காரணங்களால் விலகுகிறேன்” என்று சுந்தர்.சி வெளியிட்ட குறிப்பு பல சர்ச்சைகளை கிளப்பியது.

சுந்தரின் கதையே ரஜினி – கமலுக்கு பிடிக்காமல் இருந்ததாலோ, அல்லது ‘ஃபர்ஸ்ட் காப்பி’ ஒப்பந்தத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலோ இந்த பிரிவு நடைபெற்றது என பல தரப்பில் கூறப்பட்டது. இதே சமயம், குஷ்பூவை unnecessary-ஆக இந்த விவகாரத்துக்கு இழுத்து, “ரஜினியுடன் ஐட்டம் பாடல் நடனமாட வேண்டியதால் சுந்தர் விலகினார்” என்று சிலர் பரபரப்பை உருவாக்கினர். இதற்கு குஷ்பூ நேரடியாக ரியாக்ட் செய்து, “அப்படி வேண்டுமென்றால் உங்க வீட்டு பெண்களை அனுப்புங்க” எனக் கடுமையான பதிலை தந்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, கமல்ஹாசனும் குஷ்பூவும் சென்னை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். இருவரும் புன்னகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததால், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கின்றன. இந்த சந்திப்புக்கு நடிகை சுஹாசினியும் அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலிருந்து திரும்பியபோதுதான் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்.

இதற்கிடையில், சுந்தர்.சி விலகியதால் ‘தலைவர் 173’ படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்வி தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது. பல இயக்குநர்களின் பெயர்கள் பேசப்பட்டு வரும் நிலையில், அண்மையில் ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனின் பெயர் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காமெடியில் இருந்து க்ரைம் கிங்காக… சந்தானத்தின் புதிய அவதாரம்!

More in Cinema News

To Top