Connect with us

Sugar Daddy-யின் உண்மை அர்த்தம் – நடிகர் பப்லூ பிரித்விராஜ் ஓபன் டாக்!

Featured

Sugar Daddy-யின் உண்மை அர்த்தம் – நடிகர் பப்லூ பிரித்விராஜ் ஓபன் டாக்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் பப்லூ பிரித்விராஜ், தனது தனித்துவமான நடிப்பால் சிறப்பாக உள்ளார். சமீபத்தில் அனிமல், ஏஸ் போன்ற படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.

2022ல், நடிகர் பப்லூ பிரித்விராஜ் மற்றும் அவரது மனைவி பீனா விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு, பப்லூ ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப் வைத்தார். அவரது இந்த உறவு 30 வயது குறைவான பெண்ணுடன் இருப்பதால் சமூக ஊடகங்களில் சர்ச்சை ஏற்பட்டு, நெட்டிசன்கள் அவரை “Sugar Daddy” எனவும் கூறினர்.

இதற்கு பதிலாக, பப்லூ பிரித்விராஜ் ஒரு பேட்டியில்,
“பாவம் யாருக்கும் Sugar Daddy-யின் உண்மையான அர்த்தம் தெரியவில்லை. அந்த நேரத்தில் என் பேங்க் பேலன்ஸ் ஜீரோ தான். நான் ஒரு சின்ன அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு 20,000 ரூபாய் கொடுத்து இருந்தேன். அப்பே தான் அந்த பெண்ணை சந்தித்தேன். அவள் குடும்பத்தில் அவள் அப்பா போலீஸ் கமிஷனர், அம்மா லாயர். அந்த பெண் கோடீஸ்வரி. அவள் எனக்காக இல்லாமல், என் அழகுக்கும் அறிவுக்கும் காதல் காட்டியது. பணத்தால் காதலை வாங்கினால் தான் அதற்கு Sugar Daddy என்று அர்த்தம்.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top