Connect with us

அமீர் அண்ணன் மீது எனக்கு எப்போதும் மதிப்பு இருக்கு…இயக்குனர் சுதா கொங்கரா விளக்கம்!

Cinema News

அமீர் அண்ணன் மீது எனக்கு எப்போதும் மதிப்பு இருக்கு…இயக்குனர் சுதா கொங்கரா விளக்கம்!

இயக்குநர் நடிகர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான பிரச்சினை தான் இங்கு அதிகமாக பேசப்பட்டு வருகின்றது அதனை போல நிறைய தகவல்கள் வந்தும் இருக்கிறது…சுதா கொங்கரா இப்போது ஒரு விளக்கம் தந்து இருக்கின்றார்…

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா யூட்யூப் சேனல்க்கு பேட்டி கொடுத்த போது…ராம் படம் குறித்து பேசியுள்ளார்…இந்தப் படம் அமீர் இயக்கத்தில் வெளிவந்தது இந்த படத்தை சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடிகர் கார்த்தி, இயக்குநர் சுதா கொங்கரா உடன் தானும் பார்த்ததாக சொல்லியுள்ளார்…அந்த படத்தை பார்த்தபோது மேக்கிங்கும் வரலை, ஒண்ணும் வரலை என சுதா தெரிவித்ததாக ஞானவேல்ராஜா தெரிவித்தார் என சொல்லி ஒரு சர்ச்சையை ஞானவேல் ராஜா சொல்லி அது பல பூகம்பங்களை கொடுத்தது…

அதற்கு சுதா பதில் சொல்லி இருக்கின்றார் அதாவது – பிப்ரவரி 2,2016 அன்று அமீர் அண்ணாவிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.நான் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வெளியே காரில் சென்று கொண்டிருந்தேன்.இறுதி சுற்றுக்காக என்னை அழைத்து பாராட்டிய சினிமா துறையை சார்ந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார் எனக்கு அந்த தருணம் நன்றாக நினைவில் உள்ளது அப்போது நான் அவரிடம் ஒன்று சொன்னேன்….

என் திரைப்படத்தின் மதி முத்தழகினால் ஈர்க்கப்பட்டவள் என்பது தான் அது…அப்படி தான் எழுதினேன்…ஒரு ஆண் எழுதிய பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரங்களில் ஒன்று அது எனது படங்களில் மதி,பொம்மி பாத்திரங்களில் நடித்த இரு நடிகைகளையும் பருத்திவீரன் படத்தை பார்க்க வைத்தேன்…தமிழ் சினிமாவின் தலைசிறந்த படைப்பாளிக்கு இது நான் செலுத்தும் மரியாதை நான் சொல்ல வேண்டியது அவ்வளவு தான் என சுதா கொங்கரா தெரிவித்தார்…இதுவும் இப்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றது…

முன்னதாக இயக்குநர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…இப்போது இந்த சர்ச்சைக்கு முற்றி புள்ளி வைத்த சுதா கொங்கரா ராம் படத்தை விமர்சித்தது பற்றி ஏதும் சொல்லவில்லையே என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்..

See also  போடு வெறித்தனம் வெறித்தனம் - வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்..!!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top