Connect with us

அந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க நண்பர்களே : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு..!!

Featured

அந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க நண்பர்களே : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு..!!

எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் காத்திருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :

  • சென்னை முழுவதும் டிசம்பர் 31 இரவில் சுமார் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

  • புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும்.

  • கொண்டாட்டத்திற்காக நீச்சல் குளத்தின் மீதோ, அதற்கு அருகிலோ மேடை அமைக்கக் கூடாது.

  • கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க உத்தரவு.

  • கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண் பாதுகாவலர்களையும் நியமிக்க வேண்டும்.

  • சென்னையில் புத்தாண்டு முதல் நாள் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை வரை 400 இடங்களில் வாகனத் தணிக்கை.

  • சென்னையில் பைக் ரேஸ் நடைபெறுவதை தடுக்க 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top