Connect with us

90 நொடிகளுக்கு முன் அடித்த பெல் – அரசின் மீது வழக்கு தொடர்ந்த மாணவர்கள்..!!

Featured

90 நொடிகளுக்கு முன் அடித்த பெல் – அரசின் மீது வழக்கு தொடர்ந்த மாணவர்கள்..!!

தென்கொரியாவில் கல்லூரி நுழைவு தேர்வில் தேர்வு முடியும் நேரத்தில் 90 விநாடிகளுக்கு முன்பே மணி அடித்து, விடைத்தாள்களை வாங்கிக்கொண்டதாக அந்நாட்டு அரசின் மீது 39 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்கொரியா நாட்டில் பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் அடுத்தடுத்து 8 மணி நேரம் நடைபெறும் என கூறப்படுகிறது மேலும் இது மாணவர்களின் வேலைவாய்ப்பை தீர்மானிக்கும் தேர்வு என்றும் வழக்கு தொடர்ந்த மாணவர்கள் கூறுகின்றனர் .

இந்நிலையில் கல்லூரி நுழைவு தேர்வில் தேர்வு முடியும் நேரத்தில் 90 விநாடிகளுக்கு முன்பே கல்லூரியின் மணி அடுத்ததாகவும் ,மாணவர்கள் ஆசிரியர்களிடம் எவ்ளவோ முறையிட்டும் விடைத்தாள்களை வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் ஆசிரியர்களிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வேறு வழியின்றி தற்போது அந்நாட்டின் அரசின் மீது பாதிக்கப்பட்ட 39 மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top