Connect with us

திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் சூரியின் கருடன் – இதுவரை எவ்ளோ கலெக்சன் தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் சூரியின் கருடன் – இதுவரை எவ்ளோ கலெக்சன் தெரியுமா..?

சூரி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் கருடன் படத்தின் இரண்டு நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று கதையின் நாயகனாக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் நடிகர் சூரி.

இவரது நடப்பில் தற்போது உருவாகி உள்ள புதிய படம் தான் கருடன் . சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சமுத்திர கனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா , ரோஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியான 2 நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிரட்டலான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா - விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் டக்கர் அப்டேட் இதோ..

More in Cinema News

To Top