Connect with us

மாஸ் வசூல் வேட்டை செய்த சூரியின் ‘மாமன்’ திரைப்படம் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Featured

மாஸ் வசூல் வேட்டை செய்த சூரியின் ‘மாமன்’ திரைப்படம் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக நீண்ட காலமாக வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறார். தற்போது அவர் கதாநாயகனாகவும் தன்னை நிரூபித்து வருவதில் முழு முயற்சி எடுத்துள்ளார். இந்த புதிய பயணத்தின் தொடக்கமாக அமைந்தது, வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த ‘விடுதலை’ திரைப்படம்.

அதைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் தான் ‘மாமன்’. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சுவாசிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘விலங்கு’ என்ற வெற்றிகரமான வெப் சீரிஸின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜனின் இயக்கத்தில், ‘மாமன்’ திரைப்படம் கடந்த மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அக்கா-மகன் பாசத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சுமார் ரூ. 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இந்த படம், ரூ. 35 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெற்றிநடைபோட்ட ‘மாமன்’ திரைப்படம், வரும் ஜூன் 27ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top