Connect with us

சுதா கொங்கரா இயக்கவிருக்கும் ‘சூர்யா 43’ படத்தின் பணிகள் தொடக்கம்! Viral!

Cinema News

சுதா கொங்கரா இயக்கவிருக்கும் ‘சூர்யா 43’ படத்தின் பணிகள் தொடக்கம்! Viral!

சூர்யா நடிக்க இருக்கும் 43 வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு GV பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. அது மட்டுமின்றி இந்த படம் GV பிரகாஷ்க்கு 100வது படம் என்ற பெருமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘சூர்யா 43’படத்திற்கான பாடல் கம்போஸ் பணியை தொடங்கிவிட்டதாக GV பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். முதல் பாடலை சந்தோஷ் நாராயணன் மகளும் பிரபல பாடகியுமான தீ பாட இருப்பதாகவும் தெரிவித்துள்ள GV பிரகாஷ், சுதா கொங்காரா மற்றும் தீ உடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘சூர்யா 43’ படத்தின் முதல் பாடலின் ஒலிப்பதிவு பணி தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top