Connect with us

முதன்முறையாக குழந்தைகளின் முகத்தை பகிர்ந்த சினேகன் – இணையத்தில் வைரலாகும் குடும்பப் புகைப்படங்கள்!

Featured

முதன்முறையாக குழந்தைகளின் முகத்தை பகிர்ந்த சினேகன் – இணையத்தில் வைரலாகும் குடும்பப் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு “புத்தம் புது பூவே” என்ற பாடலை எழுதிப் பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன். பின்னர், “பாண்டவர் பூமி”, “அவரவர் வாழ்க்கை”, “தோழா தோழா” போன்ற பாடல்களை எழுதி வெற்றி பெற்றார்.

மௌனம் பேசியதே, சாமி, ஆட்டோகிராப், ராம், ஆடுகளம் போன்ற படங்களில் பல ஹிட் பாடல்கள் எழுதியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், அந்த நிகழ்ச்சிக்கு பின் தனது நீண்டநாள் காதலி கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். கமல்ஹாசன் அவர்கள் குழந்தைகளுக்கு “காதல்” மற்றும் “கவிதை” என்ற பெயர்களை வைத்தார். பல நாட்கள் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சினேகன், இப்போது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, அதற்கு அழகான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top