Connect with us

அல்லு அர்ஜுன் படத்துக்காக மாஸ் பிளான் போட்ட அட்லீ!

Featured

அல்லு அர்ஜுன் படத்துக்காக மாஸ் பிளான் போட்ட அட்லீ!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக தனது பயணத்தைத் தொடங்கியவர் அட்லீ. பின்னர், ‘ராஜா ராணி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என மூன்று வெற்றிப் படங்களை இயக்கினார். இந்த வெற்றிகளுக்குப் பிறகு, பாலிவுட்டிற்குச் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து தனது 5வது படமான ‘ஜவான்’ படத்தை இயக்கினார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஜவான்’, ரூ.1000 கோடி வசூல் சாதனை படைத்தது.
இப்போது, ‘ஜவான்’ படத்திற்குப் பிறகு அட்லீ யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்புக்கு முடிவாக, ‘புஷ்பா 2’ மூலம் மிகப்பெரிய வெற்றிகண்ட அல்லு அர்ஜுனுடன் இணைந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் புதிய படம் ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய VFX குழு இதில் வேலை செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, இப்படத்தில் 6 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வனிதா விஜயகுமார் இயக்கிய 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு – அதுவும் யார் முன்னிலையில் தெரியுமா?

More in Featured

To Top