Connect with us

உள்ளாடை மற்றும் சூட்கேஸில் 10 கிலோ தங்கம் கடத்தல் – சென்னையில் பிடிபட்ட 2 பெண்கள்..!!

Featured

உள்ளாடை மற்றும் சூட்கேஸில் 10 கிலோ தங்கம் கடத்தல் – சென்னையில் பிடிபட்ட 2 பெண்கள்..!!

உள்ளாடை மற்றும் சூட்கேஸில் 10 கிலோ தங்கம் கடத்தி வந்த இரு பெண்களை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் துபாய் சென்று இன்று அதிகாலை சென்னை திரும்பிய இரு பெண்கள் விமான நிலையத்தில் சந்தேகிக்கும்படி நடந்துகொண்டுதான் காரணமாக அவர்களை தனியாக அழைத்து தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அந்த இரு பெண்களின் உள்ளாடைக்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட தங்கம் இருந்தது கட்னுபிடிக்கப்பட்டது . இதையடுத்து அவர்கள் கொண்டு சூட்கேஸை சோதித்தபோது அதிலும் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த இரு பெண்களிடம் இருந்து 7 கோடி மதிப்பிலான 10.3 கிலோ தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள், இரு பெண்களையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற தங்கம் மற்றும் பல விலையுயர்ந்த பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து வருவது பாராட்டிற்குரியது என பலரும் பாராட்டி வருகின்றனர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழக தேர்தல் அரசியலில் புதிய திருப்பம் – த.வெ.க தனி போட்டி

More in Featured

To Top