Connect with us

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பார்த்து பொறாமையா? ஷாம் சொன்ன பதில்!

Featured

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பார்த்து பொறாமையா? ஷாம் சொன்ன பதில்!

நடிகர் சிவகார்த்திகேயன், சின்னத்திரையில் பிரபலம் ஆகி, சினிமாவுக்குள் நுழைந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

கடந்த வருடம் அவர் நடித்த அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதன் மூலம், விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களுக்கும் சவால் விடும் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அடுத்ததாக, அவர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் “மாதராசி” மற்றும் சுதா கொங்கரா உடன் “பராசக்தி” என்ற படங்களில் நடித்து வருகிறார்.

“சிவகார்த்திகேயன், போட்டியாளராக கலந்துகொண்ட நடன நிகழ்ச்சியில் ஷாம் நடுவராக இருந்தார். ஆனால் தற்போது, SK எவ்வளவு உயரம் அடைந்திருக்கிறான் பாருங்க” என பலரும் கூறுகிறார்கள்.

இதைப் பற்றி ஷாம் கூறியதாவது, “அவரை பார்த்து எனக்கு பொறாமை இல்லைய. அவர் இவ்வளவு வளர்ந்திருப்பது எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எல்லாமே கடவுள் அமைத்து கொடுத்த பாதை தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top