Connect with us

பல காதல் முறிவுகள்.. திருமணத்தை பற்றி மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்..

Featured

பல காதல் முறிவுகள்.. திருமணத்தை பற்றி மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்..

இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக அறியப்படும் ஸ்ருதி ஹாசன், தனது திறமையான நடிப்பும், பாடகியாகவும் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளார். உலகநாயகன் கமல் ஹாசனின் மகளாகும் இவர், சூர்யா, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘கூலி’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளது. தனது காதல் வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்துள்ளார் என கூறப்படுகிறது. மைக்கேல் குர்சல், சாந்தனு ஹசாரிக்கா உள்ளிட்டோருடன் அவரது காதல் முறிவடைந்தது. மேலும், நடிகர் சித்தார்துடன் நடந்த காதலும் முறிவடைந்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நெஞ்சை தொட்ட நடிப்பில் ரசிகர்களின் மனங்களை வென்றிருக்கும் ஸ்ருதி ஹாசன், இதுவரை திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்துவந்தார். இந்நிலையில், தற்போது அவர் திருமணத்தைப் பற்றி திறந்த மனதுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

“காதலிப்பது எனக்கு பிடிக்கும். ஆனால் இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை. திருமணத்தை பற்றி யோசித்ததில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது,” என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்மீக ஒளியில் மூழ்கிய சூப்பர் ஸ்டாரின் புதிய லுக்கை பாருங்க!

More in Featured

To Top