Connect with us

மூன்று நாட்களில் ‘3BHK’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Featured

மூன்று நாட்களில் ‘3BHK’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் நடித்துள்ள ‘3BHK’ திரைப்படம் கடந்த வாரம் திரையிடப்பட்டது. ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஷாந்தி டாக்கீஸின் விஷ்வா தயாரித்துள்ள இப்படம், யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான முன்னேற்றம் காண்கிறது.

மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ‘3BHK’ திரைப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 4.7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, ஒரு யதார்த்தமான கதையம்சத்தில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங்காக கருதப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top