Connect with us

கோர விபத்தில் சிக்கிய ‘குட் பேட் அக்லி’ நடிகர் ஷைன் டாம் சாக்கோ – தந்தை உயிரிழந்த சோகம்..

Featured

கோர விபத்தில் சிக்கிய ‘குட் பேட் அக்லி’ நடிகர் ஷைன் டாம் சாக்கோ – தந்தை உயிரிழந்த சோகம்..

மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வரும் ஷைன் டாம் சாக்கோ, தமிழ் சினிமாவிலும் பெயர் பெற்றவர். ‘பீஸ்ட்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன், சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில், கொச்சியில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற போதைப்பொருள் வழக்கு தொடர்பான சோதனையின் போது, ஷைன் டாம் சாக்கோ தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தப்பியோடியதாகும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடந்த கார் விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ படுகாயம் அடைந்துள்ளார். அவருடன் பயணித்த அவரது தந்தை சி.ஓ. சாக்கோ, விபத்துத் தளத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவும், அவரது தாயார் மரியா கார்மலும் தீவிர காயமடைந்த நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top