Connect with us

சைபர் க்ரைமில் சிக்கிய நடிகர் செந்தில்: பணத்தை இழந்த வீடியோ..

Featured

சைபர் க்ரைமில் சிக்கிய நடிகர் செந்தில்: பணத்தை இழந்த வீடியோ..

நடிகர் செந்தில் சின்னத்திரையில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர். சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பிரபலமான தொடர்களில் அவர் நடித்து இருக்கிறார். தற்போது, ஜீ தமிழின் அண்ணா சீரியலில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் செந்தில் சைபர் க்ரைமில் பணம் இழந்துவிட்டதாக அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார். “எனக்கு தெரிந்த நபர் ஒருவர் வாட்சப் நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது. 15 ஆயிரம் பணம் கேட்டிருந்தார். நான் ட்ரைவிங்கில் இருந்தபோது, அவர் சொன்ன நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன்.”

அதன் பிறகு, பெயரை பார்த்தால் வேறொருவர் பெயர் இருந்தது. அதைப் பற்றி போன் செய்து கேட்டபோது, அவர் தனது வாட்சப் ஹேக் ஆகிவிட்டது என்று கூறினார். “இதுபோல 500 பேர் இன்று கால் செய்து விட்டார்கள் என்று கூறினார்கள். அப்போது தான் சைபர் க்ரைமில் பணத்தை இழந்துவிட்டேன் என்பது புரிந்தது. உடனே சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறேன்” என்று செந்தில் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டப்பிங் முடிந்தது! செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’

More in Featured

To Top