Connect with us

“கோவையில் இரகசிய திருமணம்? சமந்தா – ராஜ் நிடிமாரு Wedding Shocking Update!”

Cinema News

“கோவையில் இரகசிய திருமணம்? சமந்தா – ராஜ் நிடிமாரு Wedding Shocking Update!”

நடிகை சமந்தா ரூத் பிரபு இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டதாக வந்த செய்தி, ரசிகர்கள் மட்டுமில்லாமல் முழு சினிமா உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் அருகே அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில், மிக எளிமையான மற்றும் அமைதியான முறையில் இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. எந்தவித பெரிய நிகழ்ச்சி, சினிமா சட்ஸாப், அல்லது பெரும் கூட்டத்தை தவிர்த்து, மிகவும் நெருக்கமானவர்களின் முன்னிலையில் மட்டுமே இந்த திருமணம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமாருவை மணந்துள்ளார் என்ற செய்தி வெளிவந்த சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் பல்வேறு ரியாக்ஷன்களுடன் பகிர்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இருவரின் நெருக்கம் பற்றிய பேச்சுகள் ஊடகங்களில் வெளிவந்திருந்ததால், இந்த தகவல் தற்போது வெளிப்படையாக உறுதிப்படுவது போல உள்ளது.

ரசிகர்களும், திரைப்பட வட்டாரங்களும், இந்த புதிய அத்தியாயத்தை வரவேற்று வருகின்றனர். திருமணத்தில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தாவின் வாழ்க்கையில் இது ஒரு புதிய தொடக்கம் என்பதால், சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் பெருமளவில் குவிந்து வருகின்றன


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “₹350 கோடி பட்ஜெட்… ஆனால் லாபம் குறையுதா? ஜனநாயகன் குழப்பம்!”

More in Cinema News

To Top