Connect with us

“ரியோ ராஜின் அடுத்த ஹிட்? விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!”

Cinema News

“ரியோ ராஜின் அடுத்த ஹிட்? விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!”

‘ஜோ’ படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி, அண்மையில் வெளியான ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படத்திலும் மீண்டும் இணைந்து ரசிகர்களை கவர்ந்திருந்தனர்.

இந்நிலையில், ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை நடிகர் விஜய் சேதுபதி, அவருடைய X (Twitter) பக்கத்தில் வெளியிட்டார்.

இந்தப் படம் “ராம் லீலா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கும் இந்த புதிய திட்டத்தின் படப்பிடிப்பும் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. மேலும், இந்தப்படத்தின் மூலம் புதிய நடிகை வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ரியோ ராஜ் நடித்துவரும் லவ்–டிராமா படத்துக்கு ரசிகர்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை வழங்கி வருகிறார்கள். பிக் பாஸ்க்கு பிறகு தொடர்ந்து ரியோ ராஜ்க்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது என ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top