Connect with us

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி

Featured

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி

விழுப்பரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் .

இதுகுறித்து முதல்வர் ஸ்டலைன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம். மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று (21.2.2024) மாலை TN-32-N-3938 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்து சாலை வளைவைக் கடக்க முயன்றபோது

எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வன் பிரவீன் குமார் (வயது 16) த/பெ.அன்பழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வன் வீனேஷ் (வயது 16) த/பெ.ஜெயராஜு என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிநடை போடும் பெங்களூருக்கு அழுத்தம் கொடுக்குமா பஞ்சாப்..? - தரம்சாலாவில் இன்று பலப்பரீட்சை..!!

More in Featured

To Top