Connect with us

வெறும் பணம் தானே’னு நினைத்தேன்… இப்போ தான் புரிஞ்சுது!” – நடிகர் சசிகுமாரின் ஓபன் டாக்..

Featured

வெறும் பணம் தானே’னு நினைத்தேன்… இப்போ தான் புரிஞ்சுது!” – நடிகர் சசிகுமாரின் ஓபன் டாக்..

தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட இவர், கடைசியாக நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து, இன்று ‘பிரீடம்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், மக்கள் மத்தியில் எப்படியொரு வரவேற்பை பெறப்போகிறது என்பதைக் காலமே பதிலளிக்க வேண்டும். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளில் கலந்துகொண்ட சசிகுமார், ஒரு பேட்டியில் பணம் குறித்தும் தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார். அந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது: “பணத்தைப் பற்றி இப்போ ரொம்ப புரிஞ்சுகிட்டேன். ‘புரிஞ்சுகிட்டேன்’ என்றால், பணத்தை மதிக்கத் தெரிஞ்சுக்கிட்டேன். முதல் முதல் எல்லாம் பணத்தை மதிக்கவே மாட்டோம். வெறும் பணம் தானே என்று சொல்லிக்கொண்டே பழகிவிடுவோம். சில படங்களும் நம்மை அதற்கேற்ப மாற்றி விடும். எடுத்துக்காட்டாக, ‘தளபதி’ படத்தில் ரஜினி சார் ரத்தம் கொடுத்த பிறகு பணம் கொடுக்கும்போது, நன்றி சொன்ன உடனே, ‘வெறும் பணம் தானே’ என்று சொல்வார். அந்த வசனங்களை பார்த்துப் பார்த்து நாங்களும் பணத்தை மதிக்காமல் பழகிவிட்டோம்.

ஆனால், அந்த பணமே — ‘நீ என்னை 40 வருஷமா மதிக்காம இருக்கியா?’ என்று கேட்கும்படியான நிலைக்கு என்னை கொண்டு வந்தது. அந்த தருணத்தில் தான், பணத்தின் உண்மையான மதிப்பை உணர்ந்தேன். அதுதான் பணத்தோட குணம். இப்போது அதைப் பார்த்து மதிக்கத் தொடங்கியிருக்கிறேன்.” இந்த உரைபேச்சு, சசிகுமாரின் வாழ்க்கைப் பார்வையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் இது எவ்வாறு எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதை பார்ப்பது தான் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக்பாஸ் வீட்டில் அரோரா – இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் செய்தோர் எதிர்பாராத அதிர்ச்சி!

More in Featured

To Top