Connect with us

பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி – சசிகுமார் நெகிழ்ச்சி..

Featured

பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி – சசிகுமார் நெகிழ்ச்சி..

திரையுலகில் பன்முகத் திறமை கொண்டவர் சசிகுமார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு வேடங்களில் தன்னை நிரூபித்துள்ளார். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சசிகுமார், சுப்ரமணியபுரம் திரைப்படத்தை இயக்கி அதில் நடித்தும் புகழ் பெற்றார்.

அதையடுத்து, நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சசிகுமார் கூறியது அனைவரையும் ஈர்த்தது.

“டூரிஸ்ட் ஃபேமிலி படம், பலரின் கனவுகளை நனவாக்கியுள்ளது.
நல்ல கதைகள் வைத்திருப்பவர்களுக்கு இது நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஒரே மாதிரி படம் எடுக்க வேண்டியதில்லை. வித்தியாசமான படம் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த படம் தந்துள்ளது. பெமிலி ஆடியன்ஸ் திரையரங்குகளுக்கு திரும்பி வருகிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு, எனக்கு இந்த படம் வெற்றியை கொடுத்துள்ளது.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின் உறுதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியீடு..

More in Featured

To Top