Connect with us

அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன், ரியான் பராக் – குஜராத் அணிக்கு 197 ரன்கள் இலக்கு..!!!

Featured

அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன், ரியான் பராக் – குஜராத் அணிக்கு 197 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் GT – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது .

அணியின் தொடக்க வீரர்களாக இளம் புலி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இதில் அணிக்கு தேவையான ரன்களை எடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 24 ரன்களில் அட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மறுபக்க ஆடிய பட்லரும் 8 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்ட அவருடன் சேர்ந்து ரியான் பராக்கும் வெளுத்துவங்கினார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இறுதி வரை களத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார் கேப்டன் சஞ்சு சாம்சன்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 196 ரன்களைச் குவித்தது . இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது குஜராத் அணி களத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஊழலை எதிர்த்து நின்றால் கைது செய்வீர்களா..? - கொதிக்கும் அன்புமணி

More in Featured

To Top