Connect with us

38 வயதில் சமந்தாவின் சொத்துக்களின் அளவு என்ன தெரியுமா?

Featured

38 வயதில் சமந்தாவின் சொத்துக்களின் அளவு என்ன தெரியுமா?

நடிகை சமந்தா, தெலுங்கில் வெளிவந்த “Ye Maaya Chesave” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு, பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக களமிறங்கினார். ஆனாலும், அவர் மிகப்பெரிய புகழைப் பெற்ற படம் “நான் ஈ” திரைப்படம் தான்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் கலக்கி, சமந்தா முன்னணி நடிகையாக உயர்ந்தார். விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், மகேஷ் பாபு, ஜூனியர் என் டி ஆர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். கதாநாயகியாக மட்டுமின்றி, சோலோ ஹீரோயினாகவும் படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து, தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும், “தி பேமிலி மேன் 2” வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சமந்தா, அதில் வெற்றியும் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, தற்போது சிட்டாடல் வெப் சீரிஸிலும் நடித்து பாராட்டுகளை பெற்றார். இன்று, ஏப்ரல் 28ம் தேதி, சமந்தாவின் 38வது பிறந்தநாள். திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அவர் மொத்தம் ரூ. 101 கோடி மதிப்பிலான சொத்துகளை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் 8 கோடி வரை சம்பளம் பெற்றும், “சிட்டாடல்” வெப் சீரிஸ் மூலம் ரூ. 10 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

மேலும், ஹைதராபாத்தில் அவர் வீடு வாங்கியுள்ள 3BHK பிளாட் விலை ரூ. 7.8 கோடி என்றும், மும்பையில் 3BHK வீடு ரூ. 15 கோடியாகும் என கூறப்படுகிறது. இதுவரை இதன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிப்படவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top