Connect with us

சாய் பல்லவியின் உருக்கமான குறிப்பு: தேசிய விருது பெற்றால் இதை செய்வேன்!

Featured

சாய் பல்லவியின் உருக்கமான குறிப்பு: தேசிய விருது பெற்றால் இதை செய்வேன்!

சாய் பல்லவி, மலையாளத்தில் துவங்கிய தனது திரை பயணத்தை தொடர்ந்து இன்று இந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக மாறி உள்ளார். கடந்த ஆண்டு தமிழில் வெளியான “அமரன்” படத்தில் இவரின் நடிப்பு சிறப்பாக பரிசியிடப்பட்டு ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இதன்பின்னர், சமீபத்தில் “தண்டேல்” திரைப்படம் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலம் அடைந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய வாக்கியங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறியதாவது, “என் பாட்டி 21 வயதில் என் திருமணத்திற்கு எனக்கு ஒரு புடவையை பரிசாக கொடுத்தார். எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று தெரியாது. ஆனால், தேசிய விருது போன்ற உயரிய விருது நான் பெறும் போது, அந்த புடவையை அணிந்து கொள்வது சரியாக இருக்கும். எனவே, எனக்கு தேசிய விருது கிடைத்தால், அது எனக்கு மகிழ்ச்சி தரும்” என்று அவர் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top