Connect with us

திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்! – 41 வயதில் சதாவின் ஓபன் டாக்..

Featured

திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்! – 41 வயதில் சதாவின் ஓபன் டாக்..

‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சதா, ரவி மோகனுடன் நடித்திருந்த இந்த படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

சதா தமிழில் கடைசியாக நடித்த படம் ‘டார்ச் லைட்’. அதன்பின் தெலுங்கில் இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தாலும், முழுமையான திரைப்பணிகளில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது புகைப்படக் கலைஞராக மாறியுள்ள சதா, வனவிலங்குகள் மற்றும் பறவைகளை படம் பிடிப்பதில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார். அவை அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இதற்கிடையில், 41 வயதாகும் சதா திருமணம் செய்யாமல் இருக்கிறாரெனும் தகவலும் பரவலாக பேசப்படுகிறது. இதுதொடர்பாக, சமூக வலைதளங்களில் பலரும் “எப்போது திருமணம்?” என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இந்த கேள்விகளுக்குப் பதிலளித்த சதா, “திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்? திருமணத்தின் மீது எனக்கு ஆசையும் இல்லை. நம்பிக்கையும் இல்லை. புகைப்படத் துறையில் இன்னும் நான் நிறைய சாதிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்” என தெரிவித்துள்ளார். நடிகை சதா கூறிய இந்த கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top