Connect with us

தனி ஆளாக போராடிய ருதுராஜ் – பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு..!!!

Featured

தனி ஆளாக போராடிய ருதுராஜ் – பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு..!!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் வெறித்தனமாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் CSK – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார் .

இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர்.

நிதானமாக ஆடிய இருவரும் அணிக்கு தேவையான ரன்களை மெல்ல மெல்ல எடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 29 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து மைதானத்திற்குள் வந்த அதிரடி ஆட்டக்காரர் துபேவை டக் அவுட் செய்து வெளியேற்றினார் ஹாஸ்பிரீத் சிங் . பின்னர் ஜடேஜாவையும் ஹாஸ்பிரீத் சிங் 2 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பினார் .

அடுத்து வந்த ரிஸ்வி 21 ரன்னில் வெளியேற இந்த பக்கம் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் அரைசதம் கடந்து அசத்தினார் . ருதுராஜுடன் ஜோடி சேர்ந்து ஆடி வந்த மெயின் அலி 15 ரன்னில் வெளியேற அவரை தொடர்ந்து ருதுராஜும் ஆட்டமிழந்தார்.

பின்னர் கடைசி இரு ஓவர் இருக்கும் போது களத்திற்கு வந்த தோனி அவரால் முடிந்ததை செய்தார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 162 ரன்கள் எடுத்து.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபலக கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top